Latestமலேசியா

ஐந்து ஆண் மாணவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்: டியூஷன் ஆசிரியர் கைது

கோலாலம்பூர், அக்- 16-ஐந்து ஆண் மாணவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் டியூஷன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அச்சந்தேக நபரின் வீட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீடு தனியார் டியூஷன் மையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் Datuk Fadil Marsus தெரிவித்தார்.

அச்சம்பவங்கள் தொடர்பில் ஐந்து தனித்தனி புகார்கள் Bukit Jalil காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் புகார் அக்டோபர் 6ஆம் தேதியும், இரண்டாவது புகார் அக்டோபர் 10ஆம் தேதியும் பெறப்பட்ட நிலையில், மேலும் மூன்று புகார்கள் அக்டோபர் 11ஆம் தேதி கொடுக்கப்பட்டதாக Fadil தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமும் காவல்துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. குடும்பத்தினர், பள்ளிகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட தரப்பினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் கூறினார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377C, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!