
குவாலா பெராங், அக்டோபர்-17,திரங்கானு, குவாலா பெராங், Kampung Padang Setengge எனுமிடத்தில் ஒரு வீட்டின் பின்னால் உள்ள கால்வாயில், தலையும் ஒரு கையும் இல்லாத நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று மாலை 6.52 மணியளவில் தகவல் கிடைத்ததாக உலு திரங்கானு மாவட்டப் போலீஸ் கூறியது.
வீட்டின் பின்னால் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் தான் இந்தச் சடலத்தைக் கண்டெடுத்தார்.
சிசுவின் பாலினம் மற்றும் எந்த நாட்டவர் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
சவப்பரிசோதனைக்காக சடலம் சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனை தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விசாரனைக்கு உதவ D10 தடயவியல் பிரிவும் K-9 மோப்ப நாய் பிரிவும் களமிறக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



