Latestமலேசியா

JAIS கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய நிக் நஸ்மி; தகாத நடத்தை குற்றச்சாட்டை மறுத்து, மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மன்னிப்பு

கோலாலம்பூர், அக்டோபர்-17,கல்வத் குற்றத்திற்காக, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையான JAIS அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்ட இருவரில் தாமும் ஒருவர் என்பதை முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைதானார்.

இந்நிலையில், திட்டம் ஒன்றைப் பற்றி கலந்துரையாடவே அந்தப் பெண்ணைச் சந்தித்ததாகவும், JAIS அதிகாரிகள் வந்தபோது தாங்கள் இருவர் மட்டுமே அங்கிருந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இது தமது தவறான முடிவு என்பதை ஒப்புக்கொண்ட நிக் நஸ்மி, எந்தவொரு ஒழுக்கக்கேடான செயலிலும் ஈடுபடவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

என்றாலும், இச்சம்பவத்திற்காகத் தமது மனைவி, குடும்பத்தினர் மற்றும் BERSAMA கட்சி உறுப்பினர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

சட்ட நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதுடன், கட்சி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் நிக் நஸ்மி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஒருவர் கல்வத் குற்றத்தின் பேரில் கைதானச் செய்தி, முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், நிக் நஸ்மியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!