Latestமலேசியா

மியன்மார் நாட்டுப் பெண்ணின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்ததாகக் காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், அக்- 22-மியன்மார் நாட்டுப் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்ததாக, 26 வயதான காவல்துறை லான்ஸ் கார்ப்பரல் Muhammad Fitri Suwaidi மீது இன்று பினாங்கு, Butteworth Sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் அவர் தம் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில், Permatang Tok Jayaவில் Jalan Pekan Darat பகுதியில் ஒரு வீட்டில் அக்கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவியல் சட்டத்தின் 392ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

அரசு தரப்பு அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததுடன், நீதிமன்றம் பிணை வழங்கினால் கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்றும், சாட்சிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்குமாறு கோரியது.

தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் பிணை வழங்குமாறு Muhammad Fitri கேட்டுக் கொண்டார். அதனை அடுத்து, 5,000 ரிங்கிட் பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது. மேலும் அரசு தரப்பு கோரிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கெடா மாநிலக் காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றும் Muhammad Fitri, சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!