Latestமலேசியா

நேபாளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களைத் தேடும் பணி தொடர்கிறது

கோலாலம்பூர், அக்டோபர் 22 – நேபாளத்தின் ராசுவா (Rasuwa) பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரிடரில் காணாமல் போன 54 மலேசியர்களைத் தேடும் முயற்சியை மலேசியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நேப்பாள அரசு அதிகாரப்பூர்வமாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை நிறுத்தியுள்ள போதிலும், காத்மாண்டுவிலுள்ள மலேசியத் தூதரகம், அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் மலை ஏறும் பாதைகளிலுள்ள கண்காணிப்பு நிலையங்களுடன் இணைந்து தகவல்களைச் சேகரித்து வருகிறது.

மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் கூறுகையில், இந்தப் பேரிடர் சாதாரண வெள்ளப்பெருக்கு அல்ல. பனிப்பாறைகள் உருகியதாலும், இயற்கையாக உருவான அணைகள் உடைந்ததாலும் மலைப்பகுதியில் சுனாமியைப் போன்ற பேரிடர் ஏற்பட்டது. இதனால் நீர், சேறு மற்றும் பாறைகள் திடீரெனப் பெருக்கெடுத்து ஓடின என்றார்.

மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவான SMART, செப்டம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை ஒன்பது சக்திவாய்ந்த ட்ரோன்களுடன் நேபாளத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டது. எனினும், கடினமான மலைப்பகுதிகளைச் சென்றடைய முடியாததால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டது.

இதற்கிடையில், பேரிடரில் காணாமல் போனவர்களில் மொத்தம் 5,285 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், அவர்களில் 34 நாடுகளைச் சேர்ந்த 636 வெளிநாட்டவர்கள் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!