Latestமலேசியா

Multilaw உலகளாவிய சட்ட கட்டமைப்பின் அடுத்த தலைவராக மலேசிய வழக்கறிஞர் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் ஜோஆன் வெங்கடேசன் (Joanne Vengadesan), உலகின் முன்னணி சட்ட நிறுவன கட்டமைப்புகளில் ஒன்றான Multilaw-வின் அடுத்த தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிராக் நகரில் நடைபெற்ற Multilaw உலக மாநாட்டில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. அவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம், 2027 செப்டம்பரில் தொடங்கவுள்ளது.

1997ஆம் ஆண்டு மலேசியாவில் வழக்கறிஞராகப் பதிவு பெற்ற ஜோஆன், கோலாலம்பூரில் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் பிரிட்டனுக்குச் சென்ற அவர், கடந்த 25 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார்.

தற்போது Penningtons Manches Cooper சட்ட நிறுவனத்தின் பங்குதாரராகவும், அதன் தொழில்நுட்பத் துறைக் குழுவின் தலைவராகவும் உள்ளார். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுச் சட்டங்களில் நிபுணத்துவமும் பெற்றுள்ளார்.

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 அலுவலகங்களுடன் செயல்படும் சட்ட நிறுவனங்களை இணைக்கும் உலகளாவிய கட்டமைப்பாக Multilaw விளங்குகிறது.

மலேசியாவின் பன்முகக் கலாச்சாரச் சூழல் தனக்கு உலகளாவிய பார்வையை அளித்ததாகக் கூறிய ஜோஆன், இந்தத் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பது பெருமையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தொடங்கிய அவரது சட்டத் துறைப் பயணம், தற்போது சர்வதேசத் தலைமைப் பொறுப்பு வரை உயர்ந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!