
மலேசியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, 17 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில் காற்று மாசுக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
சிலாங்கூரின் Johan Setia பகுதியில் அதிகபட்சமாக 162 என்ற IPU அளவு பதிவானது. கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் பந்திங் பகுதிகளிலும் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.
நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், சரவாக் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவிலும் இதே நிலை பதிவானது.
மறுபுறம், சபாவின் Kimanis மற்றும் திரெங்கானுவின் Kemaman பகுதிகளில் காற்றுத் தரம் நல்ல நிலையில் இருந்தது. மேலும் 49 நிலையங்களில் காற்றுத் தரம் மிதமான நிலையில் பதிவானது.
இதனிடையே, பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழையும் பலத்த காற்றும் ஏற்படக்கூடும் என MetMalaysia எச்சரிக்கை விடுத்திருந்தது.



