
புத்ராஜெயா, அக்டோபர்-24,சிலாங்கூர், செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் இருதயவியல் துறைத் தலைவராக (Head of Cardiology) டத்தோ Dr அஸ்ரி ரங்கா பின் அப்துல்லா ராமையா முறைப்படி பதவி உயர்வுப் பெற்றுள்ளார்.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் இந்த பதவி உயர்வு கடிதத்தை அவருக்கு நேரில் வழங்கி கௌரவித்தார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை ஆற்றிவரும் Dr அஸ்ரி, சிலாங்கூர் மாநில இருதயவியல் சேவையின் தலைவராகவும், சுகாதார அமைச்சின் தேசிய இருதயவியல் சேவையின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ள இவர், 60-க்கும் மேற்பட்ட உள்ளூர் இருதய நிபுணர்களை உருவாக்கியுள்ளார்.
தேசிய இருதயக் கழகமான IJN உட்பட பல மருத்துவ அமைப்புகள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன.
நாட்டின் சுகாதாரத் துறைக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் டத்தோ Dr அஸ்ரிக்கு சமூக ஊடகங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.



