Latestமலேசியா

பொதுமக்கள் வழங்கிய RM173,733 நன்கொடையை ஏழைகளுக்கு வழங்க அக்மால் திட்டம்

மலாக்கா, அக்டோபர் 23 – அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலே (Datuk Dr Muhamad Akmal Saleh), பொதுமக்கள் வழங்கிய RM173,733.61 நன்கொடையை ஏழை மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

செபுத்தே (Seputeh) நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் (Teresa Kok) தொடர்ந்த அவதூறு வழக்கில், இழப்பீடு மற்றும் வழக்குச் செலவுகளாக 300,000 ரிங்கிட் செலுத்த நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கான தொகையைத் திரட்ட, தனது X-ADV மோட்டார் சைக்கிளை 150,000 ரிங்கிட்டுக்கு விற்றதுடன், தனது மீன் பண்ணையில் வளர்க்கப்பட்ட தலாப்பியா மீன் விற்பனை மூலம் கிட்டத்தட்ட 30,000 ரிங்கிட் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

தனது சொத்துகளை விற்றதன் மூலம் கிடைத்த தொகையையும், குடும்பத்தின் சேமிப்பையும் சேர்த்து அடுத்த வாரத்திற்குள் 300,000 ரிங்கிட் திரட்ட முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுமக்கள் வழங்கிய நன்கொடைகளை ஏழை மக்களுக்கு வழங்குவதற்கு நன்கொடையாளர்களிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், நிதி விநியோகம் சீராக நடைபெறுவதற்காகத் தொடர்ந்து பணம் அனுப்புவதை நிறுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், நன்கொடையாகக் கிடைத்த ஒவ்வொரு காசையும் தேவைப்படுவோரிடம் சேர்ப்பதாக உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!