Latestமலேசியா

சிலாங்கூரில் வனப் பூங்காக்கள், நடைபாதைகள் ஜனவரி 31 வரை மூடப்படும்

ஷா ஆலாம், அக்-23-சிலாங்கூர் மாநிலத்தில் நிரந்தர பாதுகாக்கப்படும் வனப் பகுதிகளுக்குள் உள்ள அனைத்து சூழலியல் வனப் பூங்காக்களும் மலையேற்றப் பாதைகளும், 2026 நவம்பர் 16 முதல் 2027 ஜனவரி 31 வரை பொதுமக்களுக்கு மூடப்படும். சிலாங்கூர் மாநில வனத்துறை அதனை அறிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில், அங்கு பொழுதுபோக்கு, நடைப்பயிற்சி உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

எனவே, பொதுமக்கள் வனத்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அப்பகுதிகளுக்குள் நுழைவதையும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!