Latestமலேசியா

பதவி விலகவிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

சிரம்பான், அக்-23-தாம் கூடிய விரைவில்பதவி விலகப் போவதாகப் பரவியுள்ள தகவலை நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மறுத்திருக்கிறார். மாநிலத்தில் பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் அரச நிறுவனம் தொடர்பான நெருக்கடி நிலவும் சூழலில், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அச்செய்தியை அவர் நிராகரித்தார்.

அச்செய்திப் பரவல் சில தரப்பினர் மேற்கொள்ளும் அரசியல் சித்து விளையாட்டுகள். பதவி விலகும் எண்ணம் தமக்கு சிறிதும் இல்லை என Juasseh சட்டமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இஸ்மாயில் பதவி விலகும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், பதவி விலகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் முன்னதாக சீன மொழி செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. மாநிலத்தில் நிலவும் நிர்வாக நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே இஸ்மாயில் பதவி விலகும் செய்தியை அவரது ஊடகச் செயலாளர் Mohd Fasha Musthafaவும் மறுத்துள்ளார். அச்செய்தி உண்மையில்லை. மந்திரி பெசார் வழக்கம்போல் தனது பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!