Latestமலேசியா

மலேசியாவில் 9 மாதங்களில் 54,506 முஸ்லீம் விவாகரத்து வழக்குகள் பதிவு: சிலாங்கூர் முதலிடம்

கோலாலாம்பூர், அக்டோபர்-25,நாட்டில் இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 54,506 முஸ்லீம் விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன.

மாநில அளவில் அதிகபட்சமாகச் சிலாங்கூரில் 10,872 வழக்குகளும், அதைத் தொடர்ந்து ஜோகூர் மற்றும் கெடாவில் அதிக வழக்குகளும் பதிவாகியுள்ளதாக, மலேசிய ஷரியா நீதித் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பதிவானவற்றில் இதுவரை 44,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கணவன்-மனைவிக்கு இடையே பொறுப்புணர்வு குறைபாடு, நிதி நெருக்கடி, தகவல் தொடர்பு சீர்கேடு மற்றும் சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடு ஆகியவையே விவாகரத்திற்கு முதன்மை காரணங்களாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

குறிப்பாக, திருமணமான முதல் 5 ஆண்டுகள் மிகவும் சவாலானவை என்றும், இந்த இடைப்பட்ட காலத்திலேயே அதிகப்படியான பிரிவுகள் ஏற்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்பாக தம்பதியரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த முன்னுரிமை அளிக்கப்படுவதாக ஷரியா நீதித் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!