Latestமலேசியா

தொடர்ந்து 5வது ஆண்டாக இராமகிருஷ்ண ஆசிரமச் சிறுவர்களுக்கு தீபாவளி ஷாப்பிங், விருந்து ஏற்பாடு – RSN ராயர்

ஜெலுத்தோங் நாடாளுமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில், பினாங்கு டத்தோ கெராமாட்டில் அமைந்துள்ள இராமகிருஷ்ண ஆசிரம ஆதரவற்ற சிறுவர்களுக்குத் தீபாவளி ஆடை வாங்கும் நிகழ்வும் சிறப்பு உணவு உபசரிப்பும் கோலாகலமாக நடைபெற்றது.

தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக நடத்தப்படும் இந்நிகழ்வில், பாகான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான லிம் குவான் எங் மற்றும் செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாசலம் ஆகியோர் ஜெலுத்தோங் MP RSN ராயருடன் இணைந்து கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற 55 சிறுவர்களுக்குச் செனட்டர் லிங்கேஸ்வரன் தீபாவளி அங் பாவ் பண அன்பளிப்புகளை வழங்கிச் சிறப்பித்தார்.

நாட்டின் வளர்ச்சியிலும் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் எந்தவொரு சமூகமும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் மடானி அரசாங்கம் உறுதியாக உள்ளதை இத்தகைய முன்னெடுப்புகள் புலப்படுத்துவதாக RSN ராயர் கூறினார்.

தீபாவளி சமயங்களில் வசதியில்லாதவர்களை நாம் மறக்கக் கூடாது என்றார் அவர்.

இவ்வேளையில், தீபாவளி குதூகலத்தை தாங்களும் உணரும் வகையில், புத்தாடை ஷாப்பிங் மற்றும் விருந்துக்கு ஏற்பாடு செய்த ராயருக்கு, குழந்தைகள் நெகிழ்ச்சியுடன் நன்றித் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய தொண்டு நடவடிக்கைகள், தீபாவளி நன்னாளின் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்த உதவியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!