Latestமலேசியா

தெலுக் இந்தானில் ஆற்றில் மூழ்கி காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு

ஈப்போ, அக்டோபர் 29 – பேராக், தெலுக் இந்தானிலுள்ள கம்போங் திரெங்கானு படகுத்துறையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆற்றில் தவறி விழுந்ததாகக் கருதப்பட்டு காணாமல் போன 74 வயது மூதாட்டி, இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

மூன்று நாட்களாக நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது, காலை 10.50 மணியளவில் சம்பவ இடத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், பத்து 8 பகுதியில் அவரது உடல் மிதந்த நிலையில் மோப்ப நாய் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் சபரோசி நோர் அகமது (Sabarodzi Nor Ahmad) தெரிவித்தார்.

பேராக் ஆற்றின் நீரோட்டத்தைப் பின்பற்றி, ஆற்றின் மேல் மற்றும் கீழ்ப்பகுதிகளில் நீர்மட்டத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

பின்னர், Pokok Assam படகுத்துறைக்கு உடல் கொண்டுவரப்பட்டு, மேல்நடவடிக்கைக்காக மலேசியக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3.54 மணியளவில், MERS 999 அவசர அழைப்பின் மூலம் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, ஆற்றங்கரையில் மூதாட்டிக்குச் சொந்தமான ஒரு மோட்டார் சைக்கிளும் ஒரு ஜோடி காலணிகளும் கண்டெடுக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!