Latestஉலகம்

மெல்பர்ன் வாழ் மலேசிய இந்தியர்களை ஒன்றிணைத்த தீபாவளிக் கொண்டாட்டம்

மெல்பர்ன், அக்டோபர் 31 – வேலை, படிப்பு, குடும்பப் பொறுப்புகள் எனப் பரபரப்பாக இயங்கும் வாழ்க்கைக்கு மத்தியில், மெல்பர்ன் வாழ் மலேசிய இந்தியர்கள் ஒன்றுகூடி மகிழும் விழாவாக அமைந்தது ‘பெஸ்தா தீபாவளி’.

மெல்பர்ன் மலேசிய இந்தியக் கலாசார மன்றமான MMICC முதன்முறையாக ஏற்பாடு செய்த இவ்விழா, அக்டோபர் 25-ஆம் தேதி கீஸ்பரோவின் Tatterson Pavilion அரங்கில் நடைபெற்றது. சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

நடனம், பாடல், பாரம்பரிய உணவு வகைகள் எனத் தீபாவளிக் குதூகலம் நிறைந்த இவ்விழா குறித்து, வணக்கம் மலேசியா பிரதிநிதி பிரபுவிடம் பொதுமக்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

[பிரபு – பொதுமக்கள் நேர்காணல்]

தாய்நாட்டை விட்டுத் தொலைவில் இருந்தாலும், பண்பாட்டின் வழி உறவுகளை வலுப்படுத்தவும், புதிய நட்புகளை உருவாக்கவும் இக்கொண்டாட்டம் வாய்ப்பளித்தது. பிற சமூகத்தினரும் இதில் இணைந்து சிறப்பித்தனர்.

விழாவில் பங்கேற்றவர்களிடம் வணக்கம் மலேசியா பிரதிநிதி விக்கி கருத்துக் கேட்டபோது, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

[விக்கி – பொதுமக்கள் நேர்காணல்]

பெரியவர்களுக்கு ஒன்றுகூடும் மகிழ்ச்சி என்றால், சிறுவர்களுக்கு விளையாட்டுடன் பண்பாட்டை அறிந்துகொள்ளும் வாய்ப்பு!

மலேசியா தொடர்பான வினாடி வினா, அகல்விளக்கு ஓட்டப்பந்தயம், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பங்கேற்ற குழந்தைகள், தங்களது உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

[குழந்தைகள் நேர்காணல் – 2 அல்லது 3 பதிவுகள்]

ஆஸ்திரேலியாவில் வளரும் இளைய தலைமுறைக்குத் தங்களது வேர்களை அறிமுகப்படுத்துவதுடன், மலேசிய இந்தியர்களின் பண்பாட்டையும் சமூக உறவுகளையும் தொடர்ந்து பேணுவதே இத்தகைய நிகழ்ச்சிகளின் நோக்கம் என MMICC தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!