Latestமலேசியா

பாகான் டத்தோவில் 2,000 இந்திய B40 குடும்பங்களுக்குத் தீபாவளி உதவி; 700 மாணவர்களுக்குக் கல்வி உதவி

பாகான் டத்தோ – தீபாவளியை முன்னிட்டு பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 2,000 இந்திய பி40 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

துணைப் பிரதமரும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 700 மாணவர்களுக்குத் தலா RM100 கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது. மாணவர்களின் கற்றல் வசதிகளை மேம்படுத்தும் வகையில், 16 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு தொலைக்காட்சிகளும் வழங்கப்பட்டன.

அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பளசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!