Latestமலேசியா

8 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 பி40 மாணவர்களுக்குத் தீபாவளிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்த DSK குழு

பி40 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக, TEAM DSK சார்பில் சிறப்பு தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று பத்துமலை தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு புத்தாடைகள், பலகாரங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன. மேலும், சிறார்களுக்காக விருந்து உபசரிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தீபாவளியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுடன், பகிர்வு, அக்கறை, ஒற்றுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சிறார்களிடம் கொண்டு சேர்ப்பதே இம்முன்னெடுப்பின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் முகங்களில் மகிழ்ச்சியையும் புன்னகையையும் ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய இலக்கு.

இந்நிகழ்ச்சியில் கோலாலம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த எட்டு தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். பத்துமலை, Ladang Effingham, தம்புசாமி பிள்ளை, செந்தூல், சுங்கை பூலோ சரஸ்வதி, அப்பர், Taman Melawati, Segambut ஆகியவையே அப்பள்ளிகளாகும். மொத்தம் 500 மாணவர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் பயனடைந்தனர். கடந்த ஆண்டும் இத்தகைய சமூகநல முன்னெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அது தொடரப்படுகிறது.

மாணவர்களிடையே காணப்பட்ட உற்சாகமும் மகிழ்ச்சியும் இத்தகைய சமூகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க ஊக்கமளிப்பதாக மலேசிய இந்து ஆலய-இந்து அமைப்புகளின் பேரவையான MAHIMA தலைவரும் ம.இ.கா பொருளாளருமான Datuk N. Sivakumar கூறினார்.

அன்பளிப்புப் பைகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் சிலர் தங்களது குதூகலத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

இவ்வேளையில், அடுத்த ஆண்டு பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். எதிர்காலத்திலும் இயன்றவரை இதுபோன்ற நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தவுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!