Latestமலேசியா

கங்கார் Kampung Panggas Kecil கிராம மேம்பாட்டிற்கு 500,000 ரிங்கிட் ஒதுக்கீடு – தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு

கங்கார், நவ-01-தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு, மடானி தத்தெடுக்கப்பட்ட கிராமம் (Kampung Angkat MADANI) திட்டத்தின் கீழ், பெர்லிஸ், கங்காரில் உள்ள Kampung Panggas Kecil கிராமத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக 500,000 ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது. அதற்கான நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சியை அமைச்சின் தலைமைச் செயலாளர் Dato Haslina Abdul Hamid தொடக்கி வைத்தார்.

அந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிராமத்திலுள்ள தொழுகையிடத்தைச் சீரமைத்தல், உள்ளூர் இடுகாடுகளின் வேலிகள் மற்றும் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், திறந்தவெளி மண்டபம், தன்னார்வ ரோந்துத் திட்டத்திற்காக SRS தனி அறை அமைக்கவும், மறுசீரமைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள நான்கு வீடுகளைப் பழுதுபார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதோடு, யுனிவர்சிட்டி மலேசியா பெர்லிஸ் (UniMAP) பல்கலைக்கழகத்தின் TVET மையத்துடன் இணைந்து, சூரிய ஆற்றலில் இயங்கும் 40 விளக்குகள் மற்றும் மின்கம்பங்கள் நிறுவப்படவுள்ளன. அதன் மூலம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் வெறும் நிதி ஒதுக்கீட்டுடன் நின்றுவிடாமல், UniMAP பல்கலைக்கழகத்துடன் வியூக ஒத்துழைப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக Dato Haslina தெரிவித்தார். இதன் கீழ், பல்கலைக்கழகத்தின் பயிற்றுநர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் தொழிற்கல்வி (TVET) திறன்களைப் பயன்படுத்தி களப்பணிகளில் ஈடுபடுவர் என்றும் அவர் கூறினார்.

பணியிடப் பயிற்சி (OJT) அணுகுமுறையின் மூலம் இந்த ஒத்துழைப்பு செயல்படுத்தப்படவுள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் குறைத்து, சமூகப் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், அரசாங்கம், தனியார் துறை, அரசு சாரா அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது ஒரு தளமாக அமையும் என Dato Haslina குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!