Latestமலேசியா

டயர் வெடித்து MPV மீது கவிழ்ந்த லாரி; பத்து பஹாட்டில் கணவன், மனைவி பலி

பத்து பஹாட், நவம்பர்-2,ஜோகூர், பத்து பஹாட்டில், லாரியின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம், MPV இரக கார் மீது கவிழ்ந்ததில், கணவனும் மனைவியும் உயிரிழந்தனர்.

இவ்விபத்து, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில், யொங் பெங் – மூவார் சாலையின் 8.5-ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

யொங் பெங்கிலிருந்து பாரிட் சூலோங் நோக்கிச் சென்றுகொண்டிருந்த MPV வாகனத்தின் மீது, எதிர் திசையில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக, பத்து பஹாட் மாவட்டப் போலீஸ் தெரிவித்தது.

இதில், MPV வாகனத்தை ஓட்டிய 46 Mohd Hardi Mohd Husin மற்றும் அவரது 44 வயது மனைவி Tengku Syafirana Tengku Abdullah ஆகியோர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அத்தம்பதியின் 11 வயது வளர்ப்பு மகளும், 8 வயது சொந்த மகனும் காயமடைந்தனர்.

இருவரின் கால்களிலும் தீக்காயங்களும், தலையில் காயங்களும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)-ஆவது பிரிவின்கீழ், மரணம் விளைவிக்கும் வகையில் ஆபத்தாக வாகனம் ஓட்டியதற்காக விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!