Latestஅமெரிக்காஉலகம்

புளோரிடாவில் விமான விபத்து: விமானத்தில் இருந்த அனைத்து 9 பேரும் பலி

வாஷிங்டன், நவ-02-அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் குடியிருப்புப் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அனைத்து ஒன்பது பேரும் உயிரிழந்தனர்.

Learjet 60 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.50 மணியளவில் Cresthaven அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. சம்பவத்தின்போது அவ்விமானம் Texas மாநிலத்தின் Austinனில் இருந்து Bahamas நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விபத்தில் விமானத்தில் இருந்த அனைத்து ஒன்பது பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க போக்குவரத்துத் துறை X தளத்தில் தகவல் பதிவிட்டுள்ளது.

விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணை நடத்தி வரும் நிலையில், அதற்கு FAA எனும் கூட்டரசு விமான நிர்வாகம் உதவவிருக்கிறது. இதனிடையே, விமானம் விழுந்தபோது தரையில் இருந்த யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் விமானத்தில் பனி படிந்திருப்பதாகவும், கடுமையான காற்றோட்டப் பிர்ச்சனையை எதிர்கொள்வதாகவும் விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திடம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் விமானம் அவசரநிலையை அறிவித்ததாகவும், அடுத்த ஒரு நிமிடத்தில் சுமார் 8.2 கிலோமீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வேளையில், விமானம் விபத்துக்குள்ளான நேரத்தில் புளோரிடாவின் பல பகுதிகளில் புயல் நிலவியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்கு முன் அவ்விமானம் புயல் வீசிய பகுதி ஒன்றைக் கடந்து சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விபத்துக்கான சரியான காரணம் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!