Latestமலேசியா

நாட்டின் வரி நிர்வாக மாற்றத்திற்கு உந்துசக்தியாகும் புதுமையும் நேர்மையும் – HASiL

சைபர்ஜெயா, நவம்பர் 3 – டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாட்டை அதிகரித்து, நாட்டின் வரி நிர்வாகத்தை மேலும் திறமையானதாக மாற்றுவதில் புதுமையும் நேர்மையும் முக்கியப் பங்கு வகிப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று சைபர்ஜெயாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான HASiL புதுமை மற்றும் நேர்மை தின நிகழ்ச்சியைப் பிரதமர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

கடந்த நவம்பர் 2ஆம் தேதி நிலவரப்படி, 269,900க்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் 2.14 பில்லியன் மின்னணு விலைப்பட்டியல்களை (e-Invois) சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம், 97,000க்கும் மேற்பட்டோர் முந்தைய ஆண்டுகளுக்கான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்து, 1.68 பில்லியன் ரிங்கிட் வரியைச் செலுத்த முன்வந்துள்ளனர்.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நேரடி வரி வசூல் 5.8 விழுக்காடு அதிகரித்து 174.48 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 164.92 பில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டது.

மேலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான காணொளிப் போட்டியில் 46 பங்கேற்புகள் இடம்பெற்றதுடன், நிறுவனத்தின் நேர்மை மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தும் புதிய ஒருமைப்பாட்டு ஆவணமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேவேளை, வரி நிர்வாகத் தரத்தை மேம்படுத்திய 13 நிறுவனங்களுக்கு வரி நிறுவன நிர்வாகச் சான்றிதழ் (TCG) வழங்கப்பட்டது. மேலும், அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 48 நிறுவனங்கள் பங்கேற்ற சேவை மையமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!