Latestமலேசியா

சுங்கை பட்டாணியில் ஆடையின்றி பெண்ணின் சடலம் மீட்பு; முகம் மற்றும் பிறப்புறுப்பில் காயங்கள்

சுங்கை பட்டாணி, நவம்பர்-14 – கெடா, சுங்கை பட்டாணியில் ஆற்றில் ஆடையின்றி மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தில், முகம் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, சுங்கை பட்டாணி பெக்கான் லாமா அருகே பிற்பகல் 1.30 மணியளவில் பொது மக்கள் அச்சடலத்தைக் கண்டெடுத்தனர்.

பெண்ணின் முகம் மற்றும் பிறப்புறுப்பில் காணப்பட்ட காயங்கள், விலங்குகள் கடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என, குவாலா மூடா மாவட்டப் போலீஸ் தலைவர் Hanyan Ramlan தெரிவித்தார்.

சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எனவே, குடும்ப உறுப்பினர்கள் யாராவது காணாமல் போயிருந்தால், போலீஸைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு சுற்று வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதுவரை, இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!