Latestஉலகம்

பயனர்களின் புகைப்படங்களை அனுமதியின்றி அணுகிய Meta நிறுவனத்திற்கு $880 மில்லியன் அபராதம்

ரோம், நவம்பர்-15,பயனர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உரிய அனுமதியின்றி அணுகிய குற்றச்சாட்டில், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான Meta-வுக்கு இத்தாலி அரசாங்கம் 880 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.

Android கைப்பேசிகளில் உள்ள ஃபேஸ்புக் செயலி மூலம், பயனர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவை தொடர்பான தகவல்களை Meta நிறுவனம் அணுகியதாக இத்தாலியின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புகைப்படப் பரிந்துரை அம்சத்தின் மூலம், பயனர்களின் கைப்பேசிகளில் சேமிக்கப்பட்டிருந்த புகைப்படங்களை ஃபேஸ்புக் அணுகியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த நடவடிக்கையால் இத்தாலியில் சுமார் 20 மில்லியன் Android பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அம்சத்தை இயல்பாகவே செயலிழக்கச் செய்வதுடன், பயனர்களிடமிருந்து தனியாகவும் தெளிவாகவும் அனுமதி பெற Meta நிறுவனத்திற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பயனர்களின் புகைப்படங்கள் AI பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டனவா என்பது இந்த விசாரணையில் ஆராயப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!