Latestமலேசியா

3,000 ரிங்கிட் இருந்த பையைக் களவாடிய நபரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள காவல் துறை

கோத்தா திங்கி, நவ.17-ஜோகூரில் உணவுக் கடையொன்றில் மேசையில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை மர்ம நபர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்ற சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் 41 வயதுடைய பெண் ஒருவர் சுமார் 3,000 ரிங்கிட்டைப் பறிகொடுத்தார்.

Sanggar Kota உணவு வளாகத்தில் நேற்று பிற்பகல் 3.58 மணியளவில் அச்ம்பவம் நிகழ்ந்தது. அது தொடர்பான CCTV காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

உணவுக் கடை முன் நின்று கொண்டிருந்த பெண்ணை அணுகிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மேசையில் இருந்த அவரது கைப்பையை எடுத்துக் கொண்டு தப்பியோடியதாக கோத்தா திங்கி மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendan Yusof Othman தெரிவித்தார்.

கைப்பையில் அப்பெண்ணின் தனிப்பட்ட பொருட்கள் இருந்ததாகவும், அதன் மொத்த மதிப்பு ஏறக்குறைய 3,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். CCTV காட்சிகளின்படி, சந்தேக நபர் கைப்பையுடன் அருகிலிருந்த காரை நோக்கி ஓடி, அதில் ஏறித் தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

அச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 019-9089066 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!