Latestமலேசியா

நெகிரி செம்பிலான் செண்டாயானில் ‘Mee Goreng’- கில் எலி எச்சம்; உணவருந்தாமல் திரும்பிய வாடிக்கையாளர்

நெகிரி செம்பிலான், நவம்பர் 16 – நெகிரி செம்பிலான், செண்டாயானிலுள்ள (Sendayan) உணவகம் ஒன்றில் வாங்கிய Mee Goreng’- கில் எலியின் கழிவைப் போன்ற பொருள் இருந்ததாகக் கூறி, வாடிக்கையாளர் ஒருவர் உணவருந்தாமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அந்த உணவகத்துக்கு மூன்று முறை சென்றபோதும் ஒவ்வொரு முறையும் சுகாதாரப் பிரச்சினையை எதிர்கொண்டதாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். முதல் முறை Mee Goreng எலி எச்சத்தைப் போன்ற பொருளைக் கண்டதாகவும், இரண்டாவது முறை சாப்பாட்டில் ஈக்கள் மொய்த்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது முறையாக, பிள்ளையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு உணவருந்தச் சென்றபோதும் இதேபோன்ற நிலையை எதிர்கொண்டதால் உணவைச் சாப்பிடாமல் திரும்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அந்த உணவகத்தின் சுகாதார நிலை குறித்து வேறு சில சமூக ஊடகப் பயனர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருப்பினும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குற்றச்சாட்டுகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உணவக நிர்வாகத்திடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்தைப் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!