Latestமலேசியா

பெசுட்டில் நீர்ப்பாசனக் கால்வாயில் மூழ்கி 12 வயது மாணவர் பலி!

பெசுட், நவ19-திரங்கானு, பெசுட்டில் Jabi, Kampung Tok Dor Dalam பகுதியில், நேற்று மாலை நீர்ப்பாசனக் கால்வாயில் நண்பர்களுடன் நீந்தச் சென்ற ஆறாம் ஆண்டு மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்தவர், Kampung Baru Tok Dor தேசியப் பள்ளியைச் சேர்ந்த Muhammad Shahir Nazril Mohd Nuzi என மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendan Mohd Rozaime Ab Rahim தெரிவித்தார்.

அச்சம்பவம் குறித்து மாலை 5.58 மணியளவில் பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. மீட்கப்பட்ட மாணவர், அவசர சிகிச்சைக்காக Jabi சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

பெசுட் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வில், மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாக Mohd Rozaime தெரிவித்தார். பின்னர், அவரது உடல் அடக்கம் செய்வதற்காகக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க, ஆறுகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள், வடிகால்கள் மற்றும் கடற்கரைகளுக்கு அருகில் பிள்ளைகள் இருக்கும்போது பெற்றோர்களும் பாதுகாவலர்களும் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!