Latestமலேசியா

Chow Kit துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கொள்ளையன் மீது 9 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பு

கோலாலம்பூர், நவம்பர் 19 – நேற்று அதிகாலை கோலாலம்பூர் Chow Kit பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஆடவர், கடந்த மே மாதம் முதல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டியதன் அடிப்படையில், அவர் மீது 9 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. மேலும், கடந்த அக்டோபர் மாதம் கோம்பாக்கில் கடத்திச் செல்லப்பட்ட டாக்ஸியைப் பயன்படுத்தி, வெளிநாட்டுப் பெண்கள் மற்றும் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் (Datuk Fadil Marsus), சந்தேக நபருடன் தொடர்புடைய மற்ற கூட்டாளிகளைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், அந்தச் சந்தேக நபர் வெளிநாட்டுப் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோரை இலக்காகக் கொண்டு 24 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.

நேற்று அதிகாலை சௌ கிட் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தியபோது, துப்பாக்கியால் போலீஸாரை நோக்கிச் சுட்டதால், தற்காப்புக்காக போலீஸார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!