
கோலாலம்பூர், நவம்பர்-29,தனது காதலன் உண்மையில் PAS கட்சியின் ஆதரவாளர் என்பதை அறிந்த பெண் ஒருவர், மூன்றாண்டு கால காதல் உறவையே முறித்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
Threads சமூக வலைத்தளத்தில் அப்பெண் பகிர்ந்துள்ள பதிவு இணையவாசிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது காதலனின் கைப்பேசியைப் பயன்படுத்தியபோது, அவரது மற்றொரு Threads கணக்கைத் தற்செயலாகப் பார்த்ததாக அப்பெண் கூறியுள்ளார்.
அந்தக் கணக்கில் அவர் தொடர்ந்து PAS கட்சிக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வந்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
எனவே அரசியல் கருத்து வேறுபாடு காரணமாகவே காதல் உறவை முறித்துக்கொண்டதாக அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
அவரது முடிவுக்குச் சில இணையவாசிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அரசியல் வேறுபாடுகள் காதல் உறவைப் பாதிக்க வேண்டிய அவசியமில்லை என வேறு சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தானும் தனது கணவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை ஆதரித்த போதிலும், 30 ஆண்டுகளாக இணைந்து வாழ்வதாகப் பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.



