
ஷா ஆலாம், செப்டம்பர்-20,
சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிக்கின் அவர்களின் புகைப்படத்தை வைத்து போலி டிக் டோக் கணக்கொன்று உலா வருவது கண்டறியப்பட்டுள்ளது.
AI அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசியாரின் புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் சுல்தான் அலுவலகம் கூறியது.
மற்ற தனிநபர்கள் மற்றும் பிரமுகர்களின் போலிப் படங்களையும் அந்த டிக் டோக் கணக்குப் பயன்படுத்தியுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட போலி டிக் டோக் கணக்குக்கு எதிராக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
புகார் கிடைத்திருப்பதை ஷா ஆலாம் போலீஸ் நிலையமும் உறுதிச் செய்தது.
சமூக ஊடகங்களில் இது போன்ற போலி கணக்குகள் மற்றும் பக்கங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களுக்கும் சிலாங்கூர் அரண்மனை அறிவுறுத்தியது.