மலேசியா

AMPFKL11 விருது விழா: சிறந்த திரைப்படமாக ‘Macai’ தேர்வு; ஹிந்த்ரா போஸ் சிறந்த நடிகர் விருதை வென்றார்

கோலாலம்பூர், ஜூன்-21,

கோலாலம்பூர் திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் 11-ஆவது விருது வழங்கும் விழாவில், மலேசிய இந்தியத் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.

​உள்ளூர் சினிமா கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டும் நோக்கில் நடைபெற்ற இவ்விருது விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான உயரிய விருதை ‘Macai’ திரைப்படம் தட்டிச்சென்றது.

​சன்-ஜே பெருமாள் மற்றும் சிவானந்தம் பெரியண்ணன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் நேர்த்தியான உருவாக்கத்திற்காக நடுவர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று, இந்த ஆண்டின் மிகச்சிறந்த மலேசிய இந்தியத் திரைப்படமாக உருவெடுத்துள்ளது.

​தொடர்ந்து, ‘Simple Manusan’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஹிந்த்ரா போஸ் (Hindra Bose), சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

​ஹரன் காவேரி மற்றும் சோபான் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், எளிய மக்களின் எதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றது.

படம் வெளியான போதே ஹிந்த்ராவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

​இந்த வெற்றிகள் மலேசிய இந்தியத் திரையுலகின் ஆரோக்கியமான பரிணாம வளர்ச்சியை உணர்த்துவதாக திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!