
கோலாலம்பூர், மே 29 – கோலாலம்பூர் அருகே உள்ள சான் சௌ லின் (Chan Sow Lin) நிலையம் அருகில் நேற்று LRT ரயில் தடம் புரண்ட சம்பவத்தை நிலப் பொது போக்குவரத்து முகமை (APAD) தீவிரமாக விசாரித்து வருகிறது.
அம்பாங், ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் சென்ற ரயில், சேதமடைந்த தட மாற்று அமைப்பை கடக்கும் போது தடம் புரண்டதால் சேவை பாதிக்கப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு APAD தலைமை இயக்குநர் மற்றும் ரயில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் உத்தரவின் பேரில் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக APAD தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில் பாதுகாப்பு நடைமுறைகள், பராமரிப்பு பணிகள், ரயில் இயக்கம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும்.
மேலும், சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க ரயில் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலட்சியம் அல்லது விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால், பொதுப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் APAD எச்சரித்துள்ளது.



