Latestமலேசியா

புக்கிட் ஜாலில் தேசிய அரங்க மேம்பாட்டு திட்டம் தொடர்பாக MACC விசாரணை

புக்கிட் ஜாலில், மே-29-புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தின் மேம்பாட்டு பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரணை நடத்தி வருகிறது.

சுமார் 24 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இந்த திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வ புகார் பெறப்பட்டுள்ளதாக MACC தெரிவித்துள்ளது.

2027 SEA Games போட்டிக்கான தயாரிப்பில் இடம்பெறும் இரண்டு தெண்டர்கள் குறித்து இந்த புகார் எழுந்துள்ளது.

அதில் புதிய ஓட்டப்பந்தய தடம் அமைத்தல் மற்றும் இசை நிகழ்ச்சிகள், பெரிய நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு தரை அமைப்பு ஆகியவை அடங்கும்.

புகார் அளித்தவர், சீனாவின் JRace ஓட்டப்பந்தய தட அமைப்பு ஏன் தேர்வு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒலிம்பிக் மற்றும் உலகளவிலான போட்டிகளில் பயன்படுத்தப்படும் பிற சர்வதேச நிறுவனங்களும் இதே விலைக்குள் தெண்டரில் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.

மேலும், தரம், நீடித்த பயன்பாடு மற்றும் நீண்டகால மதிப்பு ஆகியவை சரியாக மதிப்பாய்வு செய்யப்பட்டதா என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தகவல் உள்ளவர்கள் முன்வந்து ஒத்துழைக்குமாறு MACC பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!