
கெமாமான், டிசம்பர் 27-திரெங்கானு கெமாமானில், 250 கிலோ கிராம் எடையிலான ஓர் ஆண் தாப்பீர், சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வாகனம் மோதியதால் இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என PERHILITAN வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோலாலம்பூர்–குவாந்தான் சாலையில் உள்ள கிஜால் பகுதியில், நேற்று காலை சுமார் 11.40 மணியளவில், ஓட்டுநர் ஒருவர் இந்த தாப்பீரின் உடலை கண்டு தகவல் அளித்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், வாகன மோதலுக்கான அடையாளங்கள் காணப்பட்டதாக கூறினர்.
கடந்த 6 மாதங்களில் திரங்கானுவில் கொல்லப்பட்ட இரண்டாவது தாப்பீர் இதுவாகும்.
மலேசியாவில் தாப்பீர்கள் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளாகும்.
இந்நிலையில், காடுகளுக்கு அருகிலுள்ள சாலைகளில் விலங்கு–வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவது கவலை அளிப்பதாகக் கூறிய அதிகாரிகள், வனப்பகுதிகள் அருகே பயணம் செய்யும் போது அதிக கவனத்துடன் வாகனமோட்ட வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.



