
புத்ராஜெயா, ஆகஸ்ட்.18-Batu Puteh தீவு மீதான இறையாண்மை விவகாரம் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையை, தனது மேல்முறையீட்டில் புதிய ஆதாரமாகச் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யுமாறு Tun Dr Mahathir Mohamadட்டுக்கு புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு அந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய Tun Mமின் வழக்கறிஞர் Zainur Zakariaவுக்கு இரண்டு வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
Batu Puteh விவகாரத்தைக் கையாண்ட விதம் குறித்த விசாரணையில் Dr Mahathir ஒரு முக்கிய நபராக இருந்தார் என்பதை RCI அறிக்கை காட்டுவதாக முன்னதாக Zainur நீதிமன்றத்தில் தெரிவித்தார். RCI விசாரணையின் போது முழுமையாக உடனிருக்கவும், தமக்கு எதிரான சாட்சியங்களை எதிர்த்து வாதிட Dr Mahathirருக்கு உரிமை மறுக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.
RCI க்கு முன் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி அமைக்கப்பட்ட பணிக்குழு, Batu Puteh தீவை இழந்ததற்கு Tun Mமே பொறுப்பு என்று முடிவு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த முன்னாள் பிரதமர் அவ்விவகாரம் குறித்து அமைச்சரவையைத் தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டு உட்பட அவருக்கு எதிராக அமையும் வகையிலான முடிவுகளை RCI வெளியிட்டதாக அந்த மூத்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
RCI அறிக்கை நிறைவடையும் முன்பே டாக்டர் மகாதீரின் நீதித்துறை மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதையும், அந்த அறிக்கையைப் புதிய சான்றாகச் சமர்ப்பிக்க முன்னதாக எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.
எனவே அந்த மனுவைத் தாக்கல் செய்யுமாறு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 10 வழக்கு நிர்வாக நடவடிக்கைகளுக்கான தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Batu Puteh உள்ளிட்ட சில இடங்கள் மீதான மலேசியாவின் இறையாண்மை விவகாரத்தைக் கையாண்ட விதம் குறித்து விசாரித்த RCI, 2024 ஜூன் 12 ஆம் தேதி Tun Mம்மின் சாட்சியத்தைப் பதிவு செய்தது. அதன் அறிக்கை ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு 2024 டிசம்பர் 5 ஆம் தேதி பொதுவில் வெளியிடப்பட்டது.



