Latestஉலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 8 விமான நிலையங்கள் மூடல்

இந்தோனேசியா, செப்டம்பர் 6 – இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பால் பரவிய எரிமலைச் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவைச் சேர்ந்த இரண்டு விமான நிலையங்கள் உட்பட 8 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சுமார் 170,000
பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜகார்த்தாவின் முக்கிய விமான நிலையம் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 6 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 7 விமான நிலையங்களும் குறைந்தது காலை 8.59 மணி வரை மூடப்பட்டிருந்தன. வானிலை தொடர்ந்து மாறுவதால் விமான நிலையங்கள் எப்போது முழுமையாக திறக்கப்படும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

எரிமலைச் சாம்பல் ஜாவா பகுதியில் 6,000 மீட்டர் உயரம் வரையும், சுமத்ரா பகுதியில் 15,000 மீட்டர் உயரம் வரையும் சென்றுள்ளது. மேலும் எரிமலை வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவும், ஜகார்த்தா மற்றும் லாம்புங் பகுதிகளில் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!