கோலாலம்பூர், மே 28 – Budi Madani உதவித் திட்டத்தின் கீழ் தனியார் டீசல் வாகனம் வைத்துள்ள உரிமையாளர்கள் அதற்கான 200 ரிங்கிட்டை மாதந்தோறும் பெறுவார்கள். எனினும் ஆடம்பர டீசல் வாகனங்களை கொண்டிருப்போர் இந்த உதவித் தொகைக்கு தகுதி பெற முடியாது. மேலும் அனைத்து விவசாயிகள் மற்றும் மூலப் பொருள் சிறுதோட்டாக்காரர்களும் இந்த உதவித் தொகையை பெறுவார்கள் . பொது போக்குவரத்து மற்றும் பொருட்கள் நிறுவனங்களுக்காக 90,000 Fleet Card வசதியை My Subsidi Diesel உதவித் திட்டம் கொண்டுள்ளது.
போக்குவரத்து வசதியை வழங்கக்கூடிய தரப்பினர் டீசல் உதவித் தொகையை பெறுவது மற்றும் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் ஆக்கப்பூர்வமான டீசல் உதவித் திட்டமான Budi Madani அமைந்துள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ Amir Hamzah Azizan தெரிவித்தார். 10 ஆண்டுக்கும் குறைவான டீசல் வாகனங்களை கொண்டிருக்கும் தனிப்பட்ட உரிமையாளர்களான மலேசிய பிரஜைகளும் இந்த உதவித் தொகைக்கு தகுதி பெறுவார்கள். ஆண்டு வருமானம் 100,000 ரிங்கிட்டிற்கும் குறைவாக இருப்பவர்கள் Budi Madani உதவித் தொகைக்கு தகுதி பெற்றிருப்பார்கள் என Amir Hamzah Azizan வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.