Latestமலேசியா

சபாவில் பெண் கொடூரக் கொலைக்கு முறிந்த நிச்சயதார்த்தம், RM7,000 பணத் தகராறே காரணம் என சந்தேகம்

சபாவில் பெண் கொடூரக் கொலைக்கு முறிந்த நிச்சயதார்த்தம், RM7,000 பணத் தகராறே காரணம் என சந்தேகம்

கோத்தா கினாபாலு, பிப்ரவரி-15,

 

சபா, செப்பாங்காரில் குடும்ப மாது பல துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், முறிந்த நிச்சயதார்த்தத்தைச் சுற்றிய பண விவகாரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொலையாளியுடன் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, அவருடனான நிச்சயதார்த்தத்தை தனது தாயார் இரத்துச் செய்ததாக, அம்மாதுவின் மகன் டிக் டோக் நேரலையில் கூறினார்.

நிச்சயதார்த்த உறவை முறிக்க அவ்வாடவர் RM7,000 பணம் கேட்டதாகவும், அந்த தொகையை தாயார் வழங்கியதாகவும் கூறிய மகன், இருப்பினும், பணம் வழங்கப்பட்ட பிறகும், அந்நபர் பல்வேறு தொலைபேசி எண்கள் மூலம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்ற தாய்க்கு தொல்லைக் கொடுத்ததாக சொன்னார்.

பிறகு, தாய் வேறோர் ஆடவருடன் அறிமுகமாகி ஜனவரியில் திருமணமும் செய்துகொண்டார் என்றார் அவர்.

இந்த சூழலில் தான், தனது தாய், புதன்கிழமை ஒருவரை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அடுத்த நாள், குப்பைக் கொட்டுமிடத்தில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர் அது தனது தாயாருடையதாக இருக்கலாம் என மகன் அடையாளம் காட்டினார் .

சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள், 70 வயது சந்தேக நபர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டு, தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!