Latestஉலகம்

CNN-னையும் விட்டு வைக்காத இணையத் தாக்குதல்; உடனடி நடவடிக்கையில் இறங்கிய Tik Tok

வாஷிங்டன், ஜூன்-5 – அண்மையக் காலமாக பிரபலங்கள், முன்னனி வர்த்தக முத்திரைகள் உள்ளிட்டோரின் கணக்குகளைக் குறி வைத்து மேற்கொள்ளப்படும் இணையத் தாக்குல்களை Tik Tok கண்டறிந்துள்ளது.

அத்தாக்குதல் பிரபல செய்தி ஊடக நிறுவனமான CNN-னையும் விட்டு வைக்கவில்லை.

இதையடுத்து அத்தாக்குதல்களைச் சமாளிக்கும் உடனடி நடவடிக்கையில் Tik Tok இறங்கியுள்ளது.

குறிப்பாக CNN நிறுவனத்தின் Tik Tok கணக்கை சரி செய்வதோடு, எதிர்காலத்தில் இது போன்ற சட்டவிரோத ஊடுருவல்களில் இருந்து பாதுகாக்கவல்ல தடுப்பு நடவடிக்கைகளையும் அது மேம்படுத்தி வருகிறது.

எனினும் தாக்குதலுக்கு உள்ளான Tik Tok கணக்குகளின் எண்ணிக்கை சிறியதே என அந்நிறுவனம் விளக்கியது.

தொலைக்காட்சி பிரபலம் Paris Hilton-னின் Tik Tok கணக்கும் குறி வைக்கப்பட்டது.

ஆனால் அவரின் கணக்கு ஊடுருவப்படவில்லை.

வரும் ஜனவரிக்குள் Tik Tok-கை விற்க வேண்டும்; இல்லையென்றால் அமெரிக்காவில் அச்செயலி தடை செய்யப்படும் என்ற புயச் சட்டத்தை எதிர்த்து Tik Tok-கின் தாய் நிறுவனமான ByteDance நீதிமன்றம் சென்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனாவைத் தளமாகக் கொண்ட தயாரிப்பான Tik Tok தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாக விளங்குவதாகக் கூறி, வெள்ளை மாளிகை Tik Tok பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!