கோலாலம்பூர், மே 24 – Cryptocurrency கும்பல் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 51.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பர கார்கள், எண் பட்டைகள், கடிகாரங்கள் மற்றும் இதர பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டதோடு சட்டவிரோத பண பரிமாற்றம் உட்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான விசாரணைக்காக அவர்கள் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் Razarudin Husain தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் இந்த கும்பல் வெளிநாடுகளில் இணைய மோசடி திட்டங்களில் ஈடுபட்டு டு வருவதோடு அதன் நிதிகளை மலேசியாவுக்கு பரிமாற்றம் செய்துவருவதாகவும் அவர் கூறினார். வெளிநாடுகளில் இணைய மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் பணம் பதிவுசெய்யப்படாத நாணய மாற்று வியாபாரிகள் மற்றும் Cryptocurrency பட்டுவாடா மூலம் அவற்றை மலேசியாவிற்கு பரிமாற்றம் செய்து வருவதாக இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Razarudin கூறினார். இந்த நிதியைக் கொண்டு அவர்கள் ஆடம்பர பொருட்கள், எண் பட்டைகள் போன்றவற்றை வாங்கியிருப்பதோடு Pahang கில் 100 ஏக்கர் டுரியான் தோட்டத்திலும் முதலீடு செய்துள்ளதாக அவர் கூறினார்.