கோலாலம்பூர், ஜூன் 26 – Daesh தீவிரவாத கும்பலின் மிரட்டலை சமாளிப்பதற்கு நாட்டின் பாதுகாப்பு படையினர் எப்போதும் தாயர் நிலையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் ( Saifuddin Nasution Isamil) தெரிவித்திருக்கிறார். தீவிரவாத சித்தாந்தத்தை பரப்புவதற்கு முயன்ற சில தனிப்பட்ட நபர்களை போலீஸ் தடுப்பதில் வெற்றி பெற்றதன் மூலம் இதனை பார்க்க முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
Daesh தரப்பினர் இன்னும் இருக்கின்றனர். அவர்களின் முயற்சியை துடைத்தொழிப்பதில் போலீசார் வெற்றி பெற்றுள்ளர். நமது பாதுகாப்பு படையினர் எப்போதும் விழிப்பு நிலை மற்றும் தயாராக இருப்பதை இது காட்டுகிறது. Daesh தரப்பினரை கைது செய்ததன் மூலம் அவர்களது நிலை ஒரு வரம்புக்குள் இருப்பதோடு அதனை சமாளிக்கும் ஆற்றல் நமது பாதுகாப்பு படைக்கு இருப்பதும் நிருபிக்கப்பட்டுள்ளதாக சைபுடின் தெரிவித்தார். Daesh தீவிரவாத சித்தாந்தத்தை கொண்ட எட்டு தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து கருத்துரைக்கும்படி வினவப்பட்டபோது சைபுடின் இத்தகவலை வெளியிட்டார்.