Latestமலேசியா

Daesh தீவிரவாத நடவடிக்கையில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் 8 உள்நாட்டு பிரஜைகள் கைது

புத்ரா ஜெயா, ஜூன் 24 – IS அல்லது   Daesh  இயக்கத்தில் பயங்கரவாத மற்றும் தீவிரவாத  நடவடிக்கையில் சம்பந்தப்பட்டதன்  தொடர்பில்  எட்டு உள்நாட்டு பிரஜைகளை புக்கிட் அமான்  பயங்கரவாத துடைத்தொழிப்பு  சிறப்புப் பிரிவு  தடுத்து வைத்துள்ளது.  

ஆறு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஆகிய அனைத்து சந்தேகப் பேர்வழிகளும்  ஜொகூர்,  கிளந்தான், பினாங்கு மற்றும்  சிலாங்கூர்    ஆகிய  நான்கு மாநிலங்களிலும்  ஒரே நேரத்தில்    மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்  கைது செய்யப்பட்டதாக  உள்துறை அமைச்சர்  டத்தோஸ்ரீ சைபுடின்  நசுட்டியோன் இஸ்மாயில்  (  Saifuddin Nasution Ismail )   தெரிவித்தார்.  

கடந்த மே மாதம்   15,17 மற்றும்  30 ஆம் தேதி  மேற்கொள்ளப்பட்ட நடவடிகையை  தொடர்ந்து  நேற்று முன்தினமும் நேற்றும்    குற்றவியல் சட்டத்தின்  574 ஆவது விதி, 2012 ஆம் ஆண்டின்   சிறப்பு நடவடிககைகள்    சட்டத்தின் கீழ்  பயங்கரவாத  குற்றத்தின் கீழ்   மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.  

அனைத்து  சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து  அவர்களால் மாட்சிமை தங்கிய பேரரசர், பிரதமர் , முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின்  உயர் அதிகாரிகளுக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளதாக    சைபுடின் கூறினார்.  

25 முதல்  70 வயதுடைய இந்த சந்தேகப் பேர்வழிகள்  வேலையில்லாதவர்கள்,   குடும்ப தலைவிகள்,   கட்டுமான தொழிலாளர்கள் மற்றும்  தொழில் நிபுணத்துவர்கள்  என      பல்வேறு பொருளாதார  பின்னணியை  கொண்டவர்களாவர்.  

70  வயது சந்தேகப்  பேர்வழி  பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற    முன்னாள் விரிவுரையாளர் என சைபுடின் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் ஒரே கோட்பாடு  மற்றும்  ஒரே நம்பிக்கையை கொண்டவர்கள் .  நவீன தொழிநுட்ப  மேம்பாட்டை   தவறாக பயன்படுத்தி  ஆபத்தான     சித்தாந்தத்தை  சமூக வலைத்தளத்தின் மூலம்   பரப்பி வருகின்றனர். 

தீவிரவாத   சித்தாந்தத்தை பரப்பும்  இத்தகைய நபர்கள்  மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக  அரசாங்கம் இணக்கப் போக்கை கொண்டிருக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என சைபுடின்  எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!