
கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங் (Ong Kian Ming), 14 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த DAP கட்சியிலிருந்து இன்று விலகுவதாக அறிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு DAP-ல் இணைந்த அவர், செர்டாங் மற்றும் பாங்கி தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2018 முதல் 2020 வரை சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியல் ரீதியாக எதிர்காலத்தில் வேறு எந்தக் கட்சியிலும் இணையவோ, 16ஆவது பொதுத் தேர்தலில் (PRU16) போட்டியிடவோ தமக்கு திட்டமில்லை என ஓங் தெரிவித்துள்ளார்.
எனினும், முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் PRU16-ல் போட்டியிடுவதற்கான தொகுதியைப் பெற்றால், அவருக்காக பிரச்சாரம் செய்வதாக ஜனவரி 10ஆம் தேதி அளித்த வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றப் போவதாக ஓங் கூறினார்.
மேலும், பாட்காஸ்ட் (podcast) அதாவது வலையொளி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நாட்டிற்கு தொடர்ந்து பங்களிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.



