Latestஉலகம்

Donald Trump வழக்கு நடைபெறும் நீதிமன்றத்துக்கு வெளியே தன்னைத் தானே தீ வைத்துக் கொண்ட ஆடவர்

நியூ யார்க், ஏப்ரல் 20 – அமெரிக்கா, நியூ யார்க்கில் முன்னாள் அதிபர் Donald Trump சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நீதிமன்றத்திற்கு வெளியே, ஓர் ஆடவர் தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திடீரென பூங்காவுக்கு ஓடி, தனது பையில் இருந்த காகித குப்பைகளை எடுத்து தன் மேல் கொட்டிக் கொண்டவன், கண்ணிமைக்கு நேரத்தில் தலையில் ஏதோ திரவத்தை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த நியூ யார்க் தீயணைப்புத் துறை, கடும் தீப்புண் காயங்களுக்கு ஆளான நிலையில் அந்நபரை மருத்துவமனையில் சேர்த்தது.

அவர் இன்னமும் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீயை அணைக்கும் முயற்சியில் 4 வீரர்கள் லேசான காயங்களுக்கு ஆளாகினர்.

37 வயது அந்நபர் இவ்வாரத் தொடக்கத்தில் தான் நியூ யார்க் வந்திறங்கியது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!