Latestமலேசியா

DUKE நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலி

கோலாலம்பூர், ஏப்ரல்-5-கோலாலம்பூரில் உள்ள DUKE நெடுஞ்சாலையில் நேற்று 3 லாரிகளும் ஒரு சிறிய பிக்கப் லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

10.4-ஆவது கிலோ மீட்டரில் ஏற்பட்ட இவ்விபத்தில் 52 மற்றும் 53 வயதிலான ஆடவர்கள் சம்பவ இடத்திலேயே கடுமையான காயங்களால் பலியாயினர்.

திடீரென இயந்திரம் பழுதாகி முதல் லாரி நடு சாலையில் நின்றதால், பிக்கப் லாரியை நிறுத்தி அதன் ஓட்டுநர் உதவிக்கு வந்தார்.

இரு ஓட்டுநர்களும் பழுதுபார்ப்பில் ஈடுட்டிருந்த போது, பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாலிருந்த அனைத்து வாகனங்களையும் மோதியது.

இதனால், வெளியில் நின்றிருந்த லாரி ஓட்டுநரான உள்ளூர் ஆடவரும், பிக்கப் லாரி ஓட்டுநரான வங்காளதேசியும் உடல் நசுங்கி மாண்டனர்.

மேலுமிரு உள்ளூர் ஆடவர்களும், ஒரு வெளிநாட்டவரும் காயமடைந்து கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட சுவாச பரிசோதனையில் அவர் மது அருந்தவில்லை என கண்டறியப்பட்டது.

சிறுநீர் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!