கோலாலம்பூர், ஜூலை 4 – e – வாடகை கார் ஓட்டுனர் ஒருவர் தனது பயணி ஒருவரை திட்டுவதும் பின்னர் எச்சில் துப்பும் காட்சியைக் கொண்ட காணொளி வைரலானது .
ஒரு மளிகைக் கடை முன் நடந்த இந்த சம்பவத்தில் அந்த வாடகை கார் ஓட்டுனர் தனது பயணியை முதலில் கண்டபடி திட்டுகிறார். பின்னர் எச்சில் துப்பிய பின் மீண்டும் திட்டுவதை X தளத்தில் வைரலான காணொளியில் பார்க்க முடிகிறது.
இது குறித்து பல நெட்டிசன்கள் அந்த வாடகை கார் ஓட்டுனரை கடுமையாக திட்டி தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த காணொளியை இதுவரை 1 மில்லியன் பேர் பகிர்ந்துள்ளதோடு 65 லட்சம் பேர் அதற்கு லைக் தெரிவித்துள்ளனர்.