‘Ethiopian Airlines’ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு US$28 மில்லியன் இழப்பீடு; போயிங் நிறுவனத்திற்கு உத்தரவு

சிக்காகோ, நவம்பர் 13 – கடந்த 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘Ethiopian Airlines’ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, போயிங் (Boeing) நிறுவனம் அமெரிக்க டாலர் 28.45 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதில் 2018 ஆம் ஆண்டின் லயன் ஏர் (Lion Air) 610 விமான விபத்தும், 2019 ஆம் ஆண்டின் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் 302 விமான விபத்தும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்விபத்துகளில் மொத்தம் 346 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இந்தியாவின் நியூ டெல்லியைச் சேர்ந்த நபரும் இவ்விபத்தில் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
போயிங் நிறுவனம் விபத்துக்கான ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்ததுடன், பொறுப்பை ஏற்றுக்கொண்டு, மனித இழப்புகளுக்கான நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டது என தெரிவித்துள்ளது.
எனினும், இந்த வழக்கின் நோக்கம் இழப்பீட்டு தொகையின் நியாயமான அளவை நிர்ணயிப்பதற்காக நடைபெற்றதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.



