Latestமலேசியா

ETS இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; ஆடவர் போலீஸிடம் சிக்கினார்

தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-17-மின்சார இரயில் சேவையான ETS-ல் பயணம் செய்த பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சந்தேகத்தில், ஓர் ஆடவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

நேற்றிரவு பேராக், ஈப்போவிலிருந்து KL Sentral நோக்கிச் சென்று கொண்டிருந்த இரயிலில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய புகாரின் அடிப்படையில், தஞ்சோங் மாலிம் இரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்த உதவிப் போலீஸார் சந்தேக நபரைச் சுற்றி வளைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மற்றும் இரயிலில் இருந்த சாட்சியங்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிடிபட்ட நபர் மேல் விசாரணைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்படார்.

இதனை உறுதிச் செய்த KTMB நிறுவனம், இரயில்களில் பாலியல் தொல்லை அல்லது தவறான நடத்தைகளைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறியது.

பொதுப் போக்குவரத்தில் பயணிகளின், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதே தங்களின் முன்னுரிமைக் என்றும், பயணத்தின் போது இத்தகைய அசம்பாவிதங்கள் நேர்ந்தால் பயணிகள் உடனடியாக இரயில் அதிகாரிகளிடமோ அல்லது போலீஸாரிடமோ புகார் அளிக்க வேண்டுமென்றும் அது அறிவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!