கோலாலம்பூர், ஏப்ரல் 12 – ஏப்ரல் 9-ஆம் தேதி கமுந்திங் – புக்கிட் மேரா இடையில் ETS மின்சார ரயில் சேவைத் தடைப்பட்டதால் பாதிக்கப்பட்டப் பயணிகள் முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்.
KTMB நிறுவனம் அதனை அறிவித்திருக்கின்றது.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட KTMB, பயணத்தைத் தொடராதவர்கள் முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்றது.
பாதிக்கப்பட்டப் பயணிகள் கட்டணத்தைத் திரும்பப் பெற,
callcenter@ktmb.com.my என்ற முகவரிக்கு இமெல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Takaful Premium காப்பீடு திட்டத்தை வாங்கியப் பயணிகளை, வாடிக்கையாளர் சேவை முகவர்கள் விரைவிலேயே தொடர்புக் கொள்வார்கள்.
முழுமையானக் கோரிக்கை விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதும், சரிபார்ப்புக்குக் பிறகு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சேவைத் தடைப்பட்டதற்கான காரணம் தொடர்ந்துக் கண்டறியப்படு வருவதாக KTMB மேலும் கூறியது.
முன்னதாக, கோலாலம்பூரில் இருந்து பினாங்கு பட்டவொர்த்திற்கான ETS ரயில் பயணத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மின்சார துண்டிப்பால், பயணிகள் ரயிலினுள்ளேயே சுமார் 4 மணி நேரங்கள் சிக்கித் தவித்தனர்.