Latestமலேசியா

F1 பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்: RTM நேரலையில் ஒளிபரப்பும் – அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர், அக்-2–2026 Formula 1 Gulf Air Bahrain Grand Prix பந்தயத்தை மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையமான RTM நேரலையாக ஒளிபரப்பவிருக்கிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை அறிவித்துள்ளார்.

நேரலை ஒளிபரப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் சிப்பாங்கில் நடைபெறும் அந்த உலகத் தரம் வாய்ந்த பந்தயத்தை நேரடியாகக் கண்டு ரசிக்க முடியும் என அவர் முகநூல் பதிவில் கூறினார்.

அப்பந்தயமக அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. F1 ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்குத் திரும்பியிருக்கிறது. இதற்கு முன் மலேசியா 1999 முதல் 2017ஆம் ஆண்டு வரை சிப்பாங்கில் மலேசிய Grand Prix பந்தயத்தை நடத்தியது.

இவ்வேளையில், பந்தயத்தைக் காண உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுவதாக சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதை SIC தெரிவித்துள்ளது. மூன்று நாட்களிலும் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!