Latestமலேசியா

FFF வரிசையில் பிரத்தியேக கார் பதிவு எண்கள் அறிமுகம்; 15-ஆம் தேதி வரை ஏலத்தில் எடுக்கலாம்

மலாக்கா, மே-12 – பிரத்தியேக கார் பதிவு எண் விரும்பிகளுக்காக, புதிதாக FFF வரிசையை போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த FFF பிரத்தியேக கார் பதிவு எண்களை வரும் 15-ஆம் தேதி வரை ஏலத்தில் எடுக்கலாம்.

இணையம் வாயிலாக JPJeBid தளத்தில் திறக்கப்பட்டுள்ள ஏலம், 15-ஆம் தேதி இரவு 10 மணியோடு முடிவுக்கு வரும் என அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

ஏலத்தில் வெற்றிப் பெற்றவர்களின் பெயர்கள் மே 16-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

சாலைப் போக்குவரத்துத் துறையின் வருடாந்திர கொண்டாட்டங்களின் போது அறிமுகப்படுத்தப்படும் F வரிசையில் இவ்வாண்டு இந்த FFF வரிசை எண்கள் அறிமுகம் காண்கின்றன.

கடந்தாண்டு GOLD வரிசையில் வெளியான பிரத்தியேக எண்கள் 1 கோடியே 70 லட்சம் ரிங்கிட் வருமானத்தை ஈட்டித் தந்தன.

இவ்வாண்டு இந்த FFF வரிசை எண்களின் ஏல விற்பனை 2 கோடி ரிங்கிட்டைத் தொடும் என அந்தோனி லோக் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை, இலவச ஹெல்மட் உள்ளிட்ட மக்களுக்கான நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!